என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » விவசாயிகள் அச்சம்
நீங்கள் தேடியது "விவசாயிகள் அச்சம்"
நெல்லை மாவட்டம் கடையம் அருகே ராமநதி அணையின் தடுப்பு சுவர் இடிந்தது அப்பகுதி விவசாயிகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
நெல்லை:
இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை வழக்கத்தை விட அதிகளவில் பெய்துள்ளது. கேரளாவில் மழை வெள்ளத்தால் பெரும் சேதங்கள் ஏற்பட்டன. தமிழக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த மழையினால் அணைகள் நிரம்பின. இந்த நிலையில் திருச்சி அருகே முக்கொம்பில் கொள்ளிடம் ஆற்றில் அணை உடைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனால் அணைகளின் பாதுகாப்பு தன்மைகளை உறுதி செய்யவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதனிடையே நெல்லை மாவட்டத்தில் உள்ள ராமநதி அணையின் தடுப்பு சுவர் இடிந்தது அப்பகுதி விவசாயிகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
84 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையில் தென்கால், வடகால் மூலம் 33 குளங்கள் பாசன வசதி பயன்பெறுகின்றன. மேலும் பல லட்சம் மக்களின் குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்கிறது. இந்த அணைக்கு சுமார் 800 மீட்டர் அருகாமையில் தனியார் கல்குவாரி செயல்பட்டு வருகிறது. இந்த குவாரியில் பாறையை உடைக்க அடிக்கடி வெடி வெடிக்கப்படுகிறது.
இதனால் ஏற்படும் அதிர்வு, அணைக்கரை வரை உணரப்படுவதால் அணைக்கரை, ஷட்டர் பகுதி பலவீனமடைந்து வருகின்றன என்று விவசாயிகள் புகார் தெரிவித்தனர். மேலும் அணையின் வெளிப்புறத்தில் சில இடங்களில் விரிசல் விழுந்து நீர் கசிவு காணப்படுகிறது. தற்போது அணை நிரம்பியுள்ளதால் நீரின் அழுத்தத்தால் விரிசல் விழுந்த பகுதிகளிலிருந்து நீர் பீறிட்டு பாய்கிறது. மேலும் பல இடங்களில் நீர் கசியத் தொடங்கியுள்ளன.
அணை முழுவதும் நிரம்பியுள்ள நீர் வேகமாக வீசும் காற்றால் அணை சுவரில் பலமாக மோதுகிறது. இதனால் அணை சுவருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். எதிர்பாராதவிதமாக அணைக்கு ஏதும் ஆபத்து ஏற்பட்டால் கடையம், கோவிந்தபேரி, மேலக்கடையம், ராஜாங்கபுரம், அழகப்பபுரம், சம்பன்குளம், நீலமேகபுரம் உள்ளிட்ட கிராமங்கள் தண்ணீரில் மூழ்கும் சூழல் ஏற்படும்.
2 ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட விவசாய நிலங்கள், தோப்புகள், 10க்கும் மேற்பட்ட குளங்கள் அழியும் ஆபத்தும் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே அசம்பாவிதம் ஏதும் நடைபெறும் முன்பு மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டு அணையில் ஏற்பட்டுள்ள நீர்கசிவை கட்டுப்படுத்த வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து இருந்தனர்.
இந்த அணையில் 20 அடிக்கு மேல் மணல், பாறை கள் உள்ளது. இந்தாண்டு பெய்த தென்மேற்கு பருவமழை காரணமாக 2 முறை அணை முழு கொள்ளளவை எட்டியதால் உபரிநீர் வெளியேற்றப்பட்டது.
இந்நிலையில் அணையின் உள்பகுதியில் காற்றின் வேகத்தால் அலைகள் உக்கிரமாக எழும்புகிறது. இதனால் அணை பகுதியில் உள்ள ஓய்வறையின் தடுப்பு சுவரின் ஒரு பகுதி அரிக்கப்பட்டு இடிந்து விழுந்தது. இதையடுத்து அணை தடுப்பு சுவரில் ஒரு பகுதி இடிந்து விழுந்ததை பார்த்த விவசாயிகள், பொதுமக்கள் அணை பாதுகாப்பு குறித்து அச்சமடைந்துள்ளனர்.

×

X